நாகர்கோவில் – ஜூன் – 16
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டாம் பகுதியை சேர்ந்த வாகன ஒட்டுனர் சாம்ராஜ் (38) பணியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு பிரபல பேக்கரி கடையில் தனது குடும்பத்திற்க்கும் தனது மனைவியின் சகோதரி குடும்பத்திற்க்கும் சேர்த்து சவர்மா சிக்கன், கிரில் சிக்கன், மற்றும் குளிர் பாணம் வாங்கி சென்று, தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்துள்ளார். சவர்மா சிக்கன் சாப்பிட்ட சிறுவர்கள் சானு (10), ஆகாஷ் (8) உட்பட அனைவருக்கும் சிறிது நேரத்தில் வாந்தி , வயிற்று போக்கு ஏற்ப்பட்டு சிறுவர்களில் ஒருவன் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும், மற்றொரு சிறுவன் பள்ளியாடி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற ஆறு பேரும் வெளி நோயளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சவர்மா சிக்கன் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவது அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. எனவே குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைத்து உணவகங்களிலும் சோதனை செய்து உடனடியாக நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.