மதுரை அக்டோபர் 21,
மதுரை வேலம்மாள் மருத்துவமனை மூளை நரம்பியல் துறை சார்பாக மூளை பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தலான் நடை பயிற்சி மதுரை தெப்பக்குளத்தில் நடைபெற்றது. இந்த வாக்கத்தலான் போட்டியை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்
ஜெ.லோகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் வேலம்மாள் மருத்துவ கல்லூரியின் முதல்வர் திருநாவுக்கரசு மற்றும் வேலம்மாள் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல், மூளை நரம்பியல் மருத்துவர் கவிதா அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணேஷ்குமார் டாக்டர் அமல்ராஜ் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்