தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி ஆர்.வி.எஸ்.பத்மாவதி தோட்டக்கலை கல்லூரி சார்பில் நிலக்கோட்டை வட்டாரத்தில் தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தின் கீழ் களப் பணி மேற்கொள்கின்றனர். இதில் ஒரு அங்கமாக பங்களாபட்டியில் பப்பாளி தோட்டத்தில் வணிக ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் மஞ்சள் ஒட்டுப் பொறியின் பயன்பாடு, முக்கியத்துவத்தை செயல் முறையில் விளக்கினர். இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளான மௌனிகா, நட்சத்திரா, நிரஞ்சனா, நிதிலா, பிரியதர்ஷினி, பிரியங்கா ஆகியோர் செயல்முறையில் விளக்கியதன் மூலம் அத்தோட்ட விவசாயி பயனடைந்தார்.



