அரியலூர், டிச;07
அரியலூர் – பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை ஒன்றியத்தில் இந்திய அரசியல் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி மாவட்ட தலைவர் நாட்டார் மதுரா செல்வராசு தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் உலக சாமிதுரை ஆகியோர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பாமக மாவட்ட கவுன்சிலரும் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்ல ரவி, ஒன்றிய செயலாளர்கள் ராஜா, திருமுருகன், ஒன்றிய கவுன்சிலர் செல்வக்கடுங்கோ, முன்னாள் ஒன்றிய செயலாளர் காமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், ஜோதிவேல் , அருள், தனசேகர்,
இலங்கைச்சேரி செல்வக்குமார், வீராக்கன் குமார், நகர பொறுப்பாளர்கள் பிரதாப், அரவிந்த், என் எஸ்.பி, ஊடகப்பிரிவு படைவெட்டி கார்த்தி, என்.ஜி.பி நக்கம்பாடி பழனிவேல் உள்ளிட்ட பாமக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்