சேலம் வீரபாண்டி ஒன்றியம் பெரிய
சீராகபாடி ஊராட்சி சின்ன சீராகபாடி பகுதியில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு கொடி கம்பத்தில் அதிமுக கட்சி கொடி ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் அரிசி சிப்பம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு,நோட்டு ,புத்தகங்கள், மற்றும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வருதராஜ்,கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வெங்கடேசன்,சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் அரியானூர் பழனிசாமி,கவுன்சிலர் நாகராஜ்,கிருஷ்ணன்,
வீரபாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கேபிள் மணிகண்டன், உதயகுமார், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.பழனிசாமி, கிளைச் செயலாளர் செய் கிருஷ்ணன்,மற்றும் முக்கிய நிர்வாகிகள்,மூத்த முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டன.