அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு திமுக கட்சியின் சார்பாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம், ஆறுமுகச்சாமி மற்றும் திமுக கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



