தென்தாமரைக்குளம்., மார். 4. கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணித்துறை மற்றும் குழித்துறை முழுவளர்ச்சி சமூகச் சேவைகள் (கிட்ஸ்) இணைந்து பள்ளியாடி பகுதியில் இயற்கையான முறையில் வீட்டுத்தோட்டம் செய்வது எப்படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி,புனித திரு இருதய ஆலய வளாகத்தில் நடந்தது.
இந்தநிகழ்ச்சியில் புனித திரு இருதய ஆலய அருட்தந்தை ஜெரால்டு ஜஸ்டின் தலைமை தாங்கி,விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவங்கி வைத்து பேசுகையில் வீட்டு தோட்டத்தின் சிறப்புகளைப் பற்றி சுருக்கமாக கூறினார். மேலும் இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணி துறை தலைவி மேரி பெல்சிட் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முனைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு வீட்டு தோட்டத்தை பற்றியும் அதை எவ்வாறு வீட்டில் தயார் செய்வது என்பதை பற்றியும் அதை இயற்கையான முறையில் உரங்களை சேர்த்து எவ்வாறு கையாள்வது என்பதை பற்றியும் சிறப்பாக விளக்கினார். அதன் பிறகு ராதாபுரம், இந்தியன் விவசாய கல்லூரி, மாணவர்கள் கலந்து கொண்டு இயற்கையான முறையில் செய்யப்படும் உரங்களைப் பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.
கிட்ஸ் கைகள் அமைப்பின் இயக்குனர் கார்மல் மேரி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி வீட்டு தோட்டத்தில் முக்கியத்துவத்தை பற்றியும் கூறினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி அபர்ணேந்து ஒருங்கிணைத்திருந்தார். இந்த இயற்கையான முறையில் வீட்டுத்தோட்டம் செய்வது எப்படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.