திண்டுக்கல்
ஜூலை: 19
திண்டுக்கல் தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் முஹர்ரம் பிறை 10 புனித ஆஷீரா கர்பலா நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல் பேகம்பூர் வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள மறைஞானநகர் எஸ்.காஜா நஜ்முதீன் இல்லத்தில் நிகழ்ச்சி புனித ஹஸனைன்
ரலியல்லாஹு அன்ஹுமா மெளலிது ஷரிப் மற்றும் பயான் நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்களாட்சியை நிலைநிறுத்த கர்பலாவில் போராடி உயிர் நீத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருப்பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் மெளலிது ஷரிப் ஓதப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை தலைவர் கலிபா ஹுஸைன் முஹம்மது மன்பயி, செயலாளர் ஜே. முஹம்மது சதக்கத்துல்லா, திருச்சி தர்கா கமிட்டி உறுப்பினர் எஸ்.காஜாநஜ்முத்தீன், யாசின் மௌலானா பேக்டரி உரிமையாளர் வி.ஷேக் ஜாபர் அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் செயலாளர்
பி.எம்.ஏ. அசரப்அலி, இன்ஜினியர் அப்துல் வஹாப், ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முன்னாள் செயலாளர் அப்துல்லா, மௌலவி அப்துல் ரஹ்மான் மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஜமாத்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதுகுளத்தூர் எ.பக்ருதீன் அலி அஹ்மது, ஹாஜி. முஸ்தபா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் அஹ்மது ஷமீம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியின் போது கேள்வி – பதில் நிகழ்ச்சி போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளிகள் விவரம் : திண்டுக்கல்
கிரீன் பார்க் மெட்ரிகுலேசன் பள்ளியில் 45 மாணவ, மாணவிகள், திண்டுக்கல்
கிரீன் வேலி பப்ளிக் மேல்நிலைப்பள்ளியில் 45 மாணவ, மாணவிகள், ஸ்ரீராமபுரம். ஹாஜி. முஸ்தபா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 40 மாணவ, மாணவிகள், திண்டுக்கல் ஹஜ்ரத் அமீருண்ணிசா ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் 30 மாணவ, மாணவிகள், மானா – மூனா கோவிலூர் கொளும்பு ஸய்யத் முஹம்மது ஆலிம் மேல்நிலைப்பள்ளியில் 40 மாணவ, மாணவிகள் என மொத்தம் 200 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். கேள்வி – பதில் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில்
நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 500, இரண்டாம் பரிசாக ரூபாய் 300, மூன்றாம் பரிசாக ரூபாய் 200 என ஒவ்வொரு பள்ளிக்கும் ஆயிரம் ரூபாயும் நினைவு பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசாக பென்சில் கிட் வழங்கப்பட உள்ளது.