திருப்பூர், டிச. 23 –
தொழில் வளம் சிறக்க உடல்நலம் பெற்றிட குடும்பத்தில் உள்ள தடைகள் நீங்கிட இந்துக்களின் தலைவர் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயந்திர சுவாமிகள் அருளாசியுடன் ஸ்ரீ மகாலட்சுமி மகா யாகம் மற்றும் திருவிளக்கு பூஜை இந்து முன்னேற்ற கழகம் சார்பில் சிறு பூலுவபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்து முன்னேற்றக் கழக தலைவர் வக்கீல் கோபிநாத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பூஜையில் 108 பெண்கள் பங்கேற்று சிறப்பு திருவிளக்கு பூஜை செய்தனர்.
இதைத்தொடர்ந்து வக்கீல் கோபிநாத் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசையில், இந்துக்களின் நலனுக்காகவும், எதிர்காலத்துக்காகவும் இந்து முன்னேற்றக் கழகம் சார்பில் 108 திருவிளக்கு பூஜை மற்றும் மகா யாகம் நடைபெற்றது. இனி வரும் காலங்களில் இந்துக்களின் ஓட்டு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், இந்தியாவில் இந்துக்கள் வந்தேறி போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தீபம் ஏற்றுவதற்கு கூட நீதிமன்றம் சென்று அனுமதி பெறும் சூழ்நிலையில் உள்ளது.
ஆனால் அனுமதி வழங்கிய பிறகும் தீபம் ஏற்ற முடியாமல் உள்ளதை வன்மையாக இந்து முன்னேற்றக் கழகம் கண்டிக்கிறது என்றும், கடவுள் மறுப்பாளர்களான தி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீபம் குறித்து பேச அவசியம் இல்லை என்றும், சாதுமிரண்டால் காடு மிரளாது என்பதை போல் இந்துக்களை வஞ்சிக்கும் தமிழக அரசை எச்சரிப்பதாகவும், நீதிபதிக்கு தெரியாத விஷயமா திருமாவளவன் போன்றவர்களுக்கு தெரியப் போகிறது என்றும், விரைவில் இந்துக்களின் நியாயம் நிலை நாட்டப்படும், எங்கு அதிரடி காட்ட வேண்டுமோ அங்கு காண்பிக்கப்படும் என்று இந்து முன்னேற்றக் கழக தலைவர் வக்கீல் கோபிநாத் பேட்டி அளித்தார்.



