சாமிதோப்பு அன்புவனத்தில் கணியான் கூத்து மூலம் அய்யா வைகுண்டசாமி வரலாறு அரங்கேற்றம். தென்தாமரைகுளம்., பிப். 9. அய்யா வைகுண்ட சுவாமியின் வரலாற்றினை கணியான் கூத்து மூலம் முதல் முறையாக அரங்கேற்றம் செய்யப்பட்டது இதற்கான விழா சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் நடந்தது விழாவுக்கு அய்யா வழி சமய தலைவர் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார், பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி வரவேற்று பேசினார் நெல்லை மக்கள் கலைக்குழு நிர்வாகி எழுத்தாளர் அய்கோ முன்னிலை வகுத்தார், கணியான் கூத்து கலைஞர்கள் பாலமுருகன் அத்திப்பட்டி மாரியப்பன், யோகா பாஸ்கர் சுபா,திவ்யா அடைக்கலம் ,முத்துராஜ் விஜயன் ,பாலா, மணிகண்டன் ஆகியோர் கணியான் கூத்து அய்யா வைகுண்டர் வரலாற்று நிகழ்ச்சியை நடத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்



