திருவாரூர்
பிப்ரவரி 25,
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும்; “1000 இடங்களில்” முதல்வர் மருந்தகத்தினைதிறந்து வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கீழஓகை பகுதியில், இசட்.ஏ.101.ஓகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்வ.மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் , திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் பார் வையிட்டனர்.
1000 முதல்வர் மருந்தகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 25 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. அவைகளில் 11 கூட்டுறவு சங்கம் மற்றும் 14 தொழில் முனைவோர்கள் மூலமும் திறக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகத்தில் வாங்கும் மருந்துகளுக்கு 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கும். மேலும், கூடுதலாக 25 சதவீதம் வரை தள்ளுபடியும் முதல்வர் மருந்தகத்தில் வழங்கப்படுகிறது. முதல்வர் மருந்தகத்தில் ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல்மிஸ், நியூட்ராசூட்டிக்கல்ஸ், பிராண்டட் மருந்துகள், சித்தா, ஆயர்வேதம், யூனானி மருந்துகளும் கிடைக்கும்.
இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, பேரூராட்சி மன்ற தலைவர் மகாலெட்சுமி முருகேசன், வட்டாட்சியர் ராஜாராமன், மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.