நாகர்கோவில் ஜன 14
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் :-
உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இன்பமும், மகிழ்ச்சியும் நிறைந்த பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்
தைத்திருநாளாம் இந்த பொங்கல் நாளில் உங்கள் அனைவர் வாழ்விலும் எல்லாம் நிறைவுடன் கிடைக்க வேண்டி வாழ்த்துகிறேன். அறுவடை திருநாளாம் இந்நாளில் நாமும் சோறூட்டும் உழவர் பெருமக்கள் அனைவரையும் நன்றியுடன் போற்றுவோம். அத்துடன் உழவுக்கு துணை நிற்கும் கால்நடைகளையும் இந்நாளில் வணங்கி மகிழ்வோம்.
வண்ண கோலம் போல் வண்ணமயமான வாழ்க்கை, பொங்கி வழியும் இன்பம் என்றும் உங்கள் வாழ்வில் நிறைந்திட வாழ்த்துகிறேன்.
எல்லா வளமும் பெற்று அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.