[8:41 am, 15/1/2025] +91 96777 06646: ஊட்டி. ஜன. 16.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் குட்கா, லாட்டரி புகையிலை பொருட்களை கடத்தியவரை காருடன் மடக்கிப் பிடித்த கோத்தகிரி போலீசாரை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி. நிஷா நேரில் சென்று பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
கோத்தகிரி பகுதியில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்ற வரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் போதை பொருட்கள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்பதற்காக போலீசார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர் போதை கஞ்சா பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோத்தகிரி பகுதியில் காரில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இதன் அடிப்படையில் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் உத்தரவின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் யுவராஜ், சிறப்பு பிரிவு சப். இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் தலைமையில் சிறப்பு பிரிவு போலீசார் நேற்று காலை கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்ட போது காரில் எட்டு மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கேரளா மாநில லாட்டரி ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
[8:42 am, 15/1/2025] +91 96777 06646: காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் (41) என்பதும் அவர் கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சமவெளி பகுதிகளில் இருந்து புகையிலை பொருட்களையும் வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும் வாங்கி வந்து கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 120 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 201 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 5 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டதுடன் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி கௌரவித்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 101 கிலோ பொருட்களை கோத்தகிரி பகுதியில் போலீசார் கைது செய்து பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு கோத்தகிரி பகுதியில் போதை புகையிலைப் பொருட்கள் ஒழிப்பில் கோத்தகிரி காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.