கோவை மார்:24
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆனைமலை தனியார் திருமண மண்டபத்தில் முதல் ஆலோசனை கூட்டம் நிறுவனர் தலைவர் திருமலை. ம.ரவி, ஆனைமலை நகர தலைவர் நாகராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
கிரில் பேப்ரிகேஷன் தொழிலுக்கென்று தனித்தொழில் பேட்டை கேட்டு கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தோம்.
அன்றைய எதிர்கட்சி தலைவரும் இன்றைய தமிழக முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் செய்து தருகிறோம் என்று உறுதி அளித்தார்கள் அதனடிப்படையில் கடந்த நாடளுமன்றத் தேர்தலின் போது தொழிற்துறை அமைச்சர்
டி.ஆர்.பி.ராஜா அவர்கள் கோவைக்கென்று தனித்தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டார்.
கிரில் பேப்ரிகேஷன் தொழிலுக்கென்று தனித் தொழிற்பேட்டை அமைத்து தருவதாக ஊடகம் வாயிலாக தெரிவித்து இருந்தார். அதை நிறைவேற்றி கொடுக்கவும்
.நாங்கள் பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பெறும் சேவைத்துறையில் உள்ளோம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிக் கூடங்கள் போல் நாங்களும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்க முடியாமல் கூலிக்கு (தினக்கூலி)வேலை செய்து வருகிறோம்.
விசைத்தறி தொழில் கூடங்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது போல் கிரில் பேபரிகேசன் தொழிலுக்கும் குறைந்த பட்சம் 500 யூனிட் இலவசமாகவும் அதற்கு மேல் பயன்படுத்துவோர்களுக்கு சலுகை கட்டணத்தில் வழங்கவேண்டும் எனவும்
3.12KWA கீழ் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு LT IIIB டேரிப்பில் வசூலிக்கும் ஔஐமின்கட்டணத்தை LT IIIAI டேரிப்பில் மாற்றி அரசு பறப்பித்துள்ளது.
மின் அலுவலகங்களில் கேட்கும் போது எந்த விதமான அரசு அறிவிப்பும் வரவில்லை என்று மின்வாரிய அலுவலகங்களில் கூறுகின்றனர்.எனவே தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை மின் அலுவலகங்களுக்கு முறையான அரசு ஆணையை அறிவிப்பு கொடுக்கும் படியும்.
எங்கள் கிரில் பேபரிகேசன் தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோர்களும் தொழிலாளர்களும் விபத்தில் சிக்கி உடல் ஊணமோ அல்லது மரணமோ ஏற்பட்டால் அவர்களின் குடும்பம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.எனவே கிரில் பேபரிகேசன் தொழிலுக்கென்று தனி நலவாரியம் அமைத்துக் கொடுத்தால் 1,00,000 துக்கு மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கும் 6,00,000 கும் மேற்பட்டத் தொழிலாளர்களும் பயன்பெறுவதோடு அரசுக்கும் நன்றியுடன் இருப்பார்கள். எனவும் தெரிவித்தனர்
கூட்டத்தில் கோல்டன் ஸ்டில்ஸ் ஜெயராமன், நவ்பல் டிரேடர்ஸ் அன்வர் அலி, சரஸ்வதி ஸ்டில்ஸ் வரதராஜ், மினாஸ்டில்ஸ் முஸ்தாக்ஆனைமல முன்னாள் பேராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் பொதுச்செயலாளர் வைரம் எஸ் பெரியசா பொருளாளர் சண்முகம் துணைத்தலைவர்செந்தில்குமார் இடையர்பாளையம் அசோக்குமார் சுந்தராபுரம் ரமேஷ் பொள்ளாச்சி நகரத்தலைவர் சகாயராஜ் செயலாளர் பாரூக்
சோமனூர் நகர தலைவர் சுரேஷ் ஆனைமலை நகர செயலாளர் பாலு பொருளாளர் ராமகிருஷ்ணன் துணைத் தலைவர் கே சுரேஷ் துணை செயலாளர், கணேசன், சுரேஷ்குமார் ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் விழாவில் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் நலம் வாரியத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாரியத்தில் இணைக்கப்பட்டனர்.