விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளருக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வாழ்த்து
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளராக திமுகவின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவாவை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார் வரும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.