சென்னை – நவ- 19, இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகம் மற்றும் ஃபிட் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து ஹார்ட்ஃபுல்னெஸ் ஏற்பாடு செய்த கிரானுலஸ் கிரீன் ஹார்ட்ஃபுல்னெஸ் ரன் என்பதன் 3வது நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 80 வெவ்வேறு இடங்களில் இருந்து உலகெங்கிலும் 40,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.
ஃபாரஸ்ட் பை ஹார்ட்ஃபுல்னெஸ் என்பதை ஆதரித்து, பசுமையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த ஓட்டதினைத் தொடர்ந்து 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் 25, 000 மரக்கன்றுகள் என்ற இலக்கு முழுமை பெற்றது. இதற்கு முந்தைய நிகழ்ச்சியில் 15,000மாக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மாபெரும் ஓட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக, கிரானுலஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் உமா சிகுருபதி 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 400மீட்டர் மகளிர் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்ற தீப்தி ஜீவன்ஜி,
இந்திய தடகள தலைமை தேசிய பயிற்சியாளர் நாகபுரி ரமேஷ்,
அவினாஷ் மொஹந்தி ஐ.பி.எஸ், என்.பலராம் ஐ.ஆர்.எஸ், இந்தியாவின் பசுமை மனிதர்
மன்மீத் சிங் ,.ஹார்ட் ஃபுல்னெஸ் வழிகாட்டி மற்றும்
ஸ்ரீ ராம் சந்த்ர மிஷனின் தலைவர் தாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.