தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 1,557 பயனாளிகளுக்கு ரூ.19.52 கோடி மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆகியோர் வழங்கினர் கள்.மேலும் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் 4 முடிவடைந்த திட்டப்பணிகளை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையத்தினை அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி, பேரூராட்சி கள் துறை இயக்குனர் கிரன்குராலா, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ. சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், உதவி இயக்குனர் கணேஷ், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி. சி. ஆர்.மனோகரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



