ராமநாதபுரம், ஜுலை 31-
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் செந்தில்குமார் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவருக்கு பிரிவு உபசார விழா தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ராமநாதபுரம் கிளை சார்பில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ராமநாதபுரம் கிளை சார்பில் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ராமநாதபுரம் கிளையின் தலைவர் டாக்டர் மலையரசு தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் சிவக்குமார், பொருளாளர் டாக்டர் கிருபாகரன், துணைத் தலைவர் டாக்டர் சுபிதா, டாக்டர்கள் மார்ச்வின் கிங்ஸ்டன் சாமுவேல், கிருஷ்ணமூர்த்தி, மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ராமநாதபுரம் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பிரகலாதன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பொறுப்பாளர் பேராசிரியர் டாக்டர் கணேஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஓய்வு பெற்ற டாக்டர் செந்தில்குமார் பணி சேவைகள் குறித்து பாராட்டி பேசினர். ஓய்வு பெற்ற டாக்டர் பணியின் குறித்து அரசு டாக்டர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் டாக்டர் கண்ணகி, பெரியார் லெனின், நந்தினி பிரியா, உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறி பாராட்டி பேசினர்.