ஊத்தங்கரை மே 14
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1986 முதல் 87 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு உதவும் வகையில் பள்ளிக்கு தேவையான நிதியுதவி வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னதாக அன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசி வாங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் தங்களை ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்தும் வகையில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் அன்றைய காலக்கட்டத்தில் தங்கள் பள்ளியில் நடைபெற்ற பசுமை நினைவுகளை நினைவு கூர்ந்து பேசினார்கள் பின்னர் தங்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் இதர வளர்ச்சிக்கு நிதி உதவி வழங்கினர்.
இது போன்ற சந்திப்பு நினைவுகள் நாங்கள் பழைய காலகட்டத்தில் நடந்த பல்வேறு நினைவுகள் தற்போது கண்முன் நிறுத்துகிறது என்று நெகிழ்ச்சியான சம்பவங்களை நினைவு கூறியுள்ளார்கள் பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.