ஆரிக்கம்பேடு, அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்
கணினி வழங்கும் விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா
திருவள்ளூர் மாவட்டம், சென்னை, அம்பத்தூரை அடுத்த ஆரிக்கம்பேடு, அரசு உயர் நிலைப் பள்ளிக்கு கணினி வழங்கு விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆரிக்கம்பேடு
அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக உயர, நாளும் கடுமையாக உழைத்தது வருபவரும், மாணவர்களின் வெற்றிக்கு நல் வழிகாட்டுபவரும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான ஆர்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் முதலாவது நிகழ்வாக, தொழிலதிபர் குப்புசாமி மற்றும் மணிமேகலை குப்புசாமி அவர்களால் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளிக்கு கணினி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளியில் பேவர் பிளாக் தரை அமைப்பதற்கு இவர் ஏற்கனவே ரூ.25 ஆயிரம் நன்கொடையாக வழங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, தொண்டுள்ளம் கொண்ட தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாலை நேர சிறப்பு வகுப்பு படிக்கக்கூடிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 160 கிலோ சுண்டல் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஹிந்துஸ்தான் ஃபைபர் டெக் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பள்ளியின் புரவலர் திட்டத்திற்கு ரூபாய் 25,000 கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பூமி மாசு அடைவதை தவிர்க்க வேண்டி வீட்டில் பயன்படுத்திய பால் கவர்களை மறுசுழற்சி செய்ய எக்ஸ்னோரா நிறுவனத்தோடு இணைந்து பால் கவர் பயிர் கவர் திட்டத்திற்கு மூன்றாவது தவணையாக பத்தாயிரம் பயன்படுத்திய பால் ப்ரொபசர், மற்றும் ஆராய்ச்சியாளர் தியாகு அவர்களிடம் ஒப்படைக்கும் விழாவும் நடைபெற்றது
இவ்விழாவில், எஸ் எம் சி கல்வியாளர்
அறவாழி, பள்ளி மேலாண்மை குழு தலைவி மகாலட்சுமி மற்றும் வசந்தா, ஜெயந்தி, சிவக்குமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அனைவரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.