தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர அவைத்தலைவர் முப்பிடாதி முன்னிலை வகித்தனர் .இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு நவம்பர் 27 ம் தேதி பிறந்த 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜராஜன் ,
ராயல்கார்த்திக் , மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால்,
வார்டு செயலாளர்கள் ராமலிங்கம் ,தடிகாரன், சுப்புராஜ் ,பழனிச்சாமி,
தகவல் தொழில்நுட்ப அணி சிவசங்கரநாராயணன், ஜிந்தா மைதீன்
மகளிர் அணி பாலாமகேஸ்வரி, சீதாலட்சுமி, ஜெயராணி, மகளிர் தொண்டரணி குலாப்ஜான் ,செல்வராஜ், மாரியப்பன், ஷேக் யாசர் , கோதர் ,ரியாஸ் ,ஜெயக்குமார் பாலாஜி, ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர.