ராமநாதபுரத்தில் திமுக முகவை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி ஆய்வு கூட்டம்
துணைப் பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி கருணாநிதி பங்கேற்பு
ராமநாதபுரம், டிச.30-
ராமநாதபுரம் மாவட்டத்தில்
முகவை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆய்வுக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி,
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த முகவை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில்
திமுக துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்
கனிமொழி கருணாநிதி ,
பால்வளத்துறை அமைச்சர்
ராஜகண்ணப்பன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், தொழில் துறை அமைச்சர் ராஜா, ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ,
சட்டமன்ற உறுப்பினர்கள்
முருகேசன் (பரமக்குடி ),
மார்க்கண்டேயன் ( விளாத்திகுளம்),
, தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மேயர்கள்
சங்கீதா இன்பம் (சிவகாசி), ஜெகன் பெரியசாமி (தூத்துக்குடி), தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
விஜய கதிரவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆய்வுக் கூட்டத்தில்
திமுக துணை பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப அணி தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடியதாக தற்போது உருவெடுத்துள்ளது.
பொய்களை உருவாக்கும் தொழிற்சாலையாகபாஜக மாறி உள்ளது. மக்கள் இடையே பிரிவினையே தொடர்ந்து பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது. ஹிந்தி பொய் பரப்பும் இயக்கத்தை எதிர்த்து திமுக போராடி வருகிறது. திமுக ஒரு மாநில கட்சியாக இல்லை. நாட்டின் கருத்தியலை உருவாக்கும் தலைவராக ஸ்டாலின் திகழ்கிறார். நாட்டை வழி நடத்தும் பொறுப்பு ஒவ்வொரு சகோதரன், சகோதரிக்கும் உண்டு.
தமிழகத்தை விட்டு பிற மாநிலம் செல்லும் போது தான் தமிழகம் எவ்வாறு முன்னேறி உள்ளது என்பதை காண முடிகிறது. திராவிடத்தால் தமிழகம் உயர்ந்துள்ளது. அனைத்து துறைகளிலும் திராவிடத்தால் தமிழகம் கம்பீரமாக உள்ளது. திமுக ஆட்சி வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது.
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் தொடர்புடைய நபர் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் தற்போது தடுத்திருக்கலாம்?
தகவல் தொழில் நுட்ப அணியின் முக்கியத்துவம் தற்போது அதிகரித்துள்ளது. காலை உணவு திட்டம் துவங்கியபோது பகிரப்பட்டது.
மகா விஷ்ணுவின் சுய ரூபத்தை தகவல் தொழில் நுட்ப அணி
தோலுரித்து காட்டியது. நம் கருத்தை தடுத்து நிறுத்த எவருக்கும் தகுதியில்லை. புதிய கல்வி கொள்கையை பாஜக கொண்டு வரக்கூடாது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை இலக்கை தமிழகம் என்றே எட்டி விட்டது. உயர் கல்வி விழுக்காடு அதிகம் உள்ள மாநிலம் தமிழகம். உயர் கல்விக்கான புதுமை பெண் திட்டம், தவப்புதல்வன் திட்டம் அனைவரையும் படிக்க துணையாக உள்ளது. முன்னேறிய நாடுகளில் கூட இல்லாத மக்களை தேடி மருத்துவம் தமிழகத்தில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.