மதுரை மே 16
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் சமையல் எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23.05.2025 ஆம் தேதியன்று பிற்பகல் 5.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள். அசோசியேசன் தலைவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளர், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.