நாகர்கோவில் – செப்- 02,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெருந்தலைவர் காமராஜரின் 49 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் வேப்ப மூடு சந்திப்பில் உள்ள காமராஜரின் திரு முழு உருவ சிலைக்கு மாவட்டத் தலைவர் ஆனந்த் நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் கௌதமன் மாவட்ட இளைஞரணி தலைவர் ராகவன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் கார்த்திக், ஒன்றிய இளைஞரணி தலைவர் நிஜந்தன், ஆயுள் கால உறுப்பினர் சரத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.