ஈரோடு ஜன 30
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே மீனாட்சி சுந்தரனார் வீதியில் கேலக்ஸி மருத்துவ காப்பீடு நிறுவனம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க விழாவுக்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
தலைமை விற்பனை பிரிவு அதிகாரி குரு பிரகாஷ் முன்னிலை வகித்தார். தமிழ் நாடு விற்பனை பிரிவு துணை தலைவர் கண்ணதாசன் வரவேற்றார்.
விழாவில் டாக்டர் சி கே சரஸ்வதி எம் எல் ஏ வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர் கே எம் சி எச் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தனர்.
இதில் மண்டல அதிகாரி தியாக ராஜன் தமிழ் நாடு விற்பனை பிரிவு துணை தலைவர் சந்தோஷ் ராஜா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஈரோடு கிளை மேலாளர்கள் சசிகுமார் பிரபாகரன் ஆகியோர் நன்றி கூறினர்.