புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் உள்ள, பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு செயல்பட்டுவரும் மழைக்கால அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையர் எ.சுந்தரவல்லி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன்.
ஆகியோர் உள்ளனர்.