ஜன:7
திருப்பூர் மாநகர காவல்துறையின் 15 வது ஆணையராக ராஜேந்திரன் பொறுப்பேற்று கொண்டார்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் திருப்பூரில் சட்டம் ஒழுங்கு,குற்ற சம்பவங்களை சரி செய்யப்படும் என்றும் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கு மாநகர காவல்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு முழு கவனம் மேற்கொள்ள படும் என்றும் திருப்பூரில் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் கூறுகையில் அனைத்து கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அதை மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார் தொடர்ந்து திருப்பூரில் அவ்வுப்பொழுது பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவது குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில் சட்டவிரோத கும்பல்களுக்கு துணை போகும் முகவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் மேலும் கண்காணிக்கப்பட்டு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.