வேலூர் மே. 12
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஆர் .கே. அப்பு தலைமையில் கஸ்பா கோபாலகிருஷ்ணன் கிருஷ்ணம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
எலும்பு முறிவு நிபுணர் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் வெங்கடேஷ். பொது மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்திருந்தார் . முகாமில் எலும்பு வலிமை பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, இரத்த அழுத்தம், இரத்த சோகை, ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். உடன் மருத்துவர்கள் ,செவிலியர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.