திண்டுக்கல் மே:21
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுவத்தூர் பஞ்சாயத்து கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் கரூர் கண் மருத்துவமனை அமைப்பாளர் விக்னேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கண் மருத்துவர்
.ஃபார்சனா கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் 68 பேர் கலந்து கொண்டு பயணடைந்தார்கள். மேலும் இதில் ஐந்து நபர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏழு நபர்களுக்கு கண் மருந்துகளும், இரண்டு நபர்களுக்கு கண்கண்ணாடியும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் முடிவில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் திருப்பதி நன்றி கூறி கண் மருத்துவ முகாமை நிறைவு செய்தார்.