திண்டுக்கல் மே. 13
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள மதர் மருத்துவமனை மற்றும் புனித ஜான்ஸ் கல்வி நிறுவனங்கள் இணைந்து இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நிகழ்ச்சி திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கு மேடை அருகேயுள்ள மதர் மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு புனித ஜான்ஸ் கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஜெயந்தி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் திமுக மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர். எஸ்.எம். அமிர்தகடேஸ்வரர், டாக்டர். ஜே. ரோஷ்ணி ஏஞ்சல் ஆகியோர் கலந்து கொண்டு சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை, பொதுநலம், சர்க்கரை நோய், நரம்பியல் மகப்பேறு குடல் சம்பந்தமான நோய் போன்ற நோய்களை கண்டறிந்து முதலுதவி மற்றும் ஆலோசனைகளை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் புனித ஜான்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் எஸ். ஜான் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.