கிருஷ்ணகிரி, ஏப்ரல்.21.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு வருடங்களில் 19,601 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தகவல்.
கிருஷ்ணகிரிமாவட்டம் பர்கூர் வட்டம், சின்னமட்டாரப்பள்ளி தரப்பு, சிந்தகம்பள்ளி அண்ணாநகர் பகுதியில் பட்டா இல்லாத குடியிருப்பு வீடுகளுக்கு இலவசமாக வீட்டுமனைபட்டா பெற்ற பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் 16.04.2025 அன்று “நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் போது கலந்துரையாடினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம்,விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும், ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் நிலங்களில் குடியிருக்கும்,அனைத்து மக்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டு, அதனடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 4,000 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்குகளில் வெகுநாட்களாக குடியிருக்கும் மக்கள் பட்டா வேண்டி விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 3 செண்ட வரையும் அதேப்போல் வறுமைக்கோட்டிற்கு கீழ் சொந்தமாக நிலம் இல்லாத மக்களுக்கு இலவசமாக வீட்டும் னை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு வருடங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக, வருவாய் நிலை ஆணை எண் (21) ன் கீழ், வழங்கப்பட்ட தத்தம் பட்டாக்கள் 4703 நபர்களுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களை கிராம நத்தமாக மாறுதல் செய்த பட்டாக்கள் 3,901 நபர்களுக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நபர்களுக்கும். ஏழை, எளிய, விளிம்பு நிலையில் உள்ள 2,215 நபர்களுக்கும், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 447 நபர்களுக்கும், பாரத பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ் 204 நபர்களுக்கும்.கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ், 344 நபர்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர்கள் 49 நபர்களுக்கும், தனிநபர் பட்டா 20 நபர்கள் என மொத்தம் 19,601 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதுஎனமாவட்ட ஆட்சித்தலைவர்ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளி காந்தா க பெ.வேலு (செல்: 8098242533) அவர்கள் தெரிவித்ததாவது,
நான் எனது குடும்பத்துடன் (1 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை ) பாகூர் வட்டம், சினமட்டாரப்பள்ளி தரப்பு, சிந்தகம்பள்ளி அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எங்கள் குடும்பத்தினர் 15 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றோம். நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு பட்டா எங்களது பெயரில் இல்லாத நிலையில்,
மனு அளித்து எந்த பயனும் இல்லை. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பட்டா இல்லாத குடியிருப்பு வீடுகளுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும் என அறிவித்ததையடுத்து, தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு (கிராம நத்தம் சர்வே எண். 665/16 ல்) இலவசமாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது எங்கள் குடும்பத்திற்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களைப் போன்ற நீண்ட காலமாக பட்டா இல்லாத குடியிருப்புகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி வரும் தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளி சசிகலா க/பெ.சத்தியவேல் (செல்: 6380437077) அவர்கள் தெரிவித்ததாவது:
நான், எனது குடும்பத்துடன் பர்கூர் வட்டம், சின்னமட்ட ஈரப்பள்ளி தரப்பு, சிந்தகம்பள்ளி அண்ணாதகர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எங்களது குடும்பத்தினர் 15 வருடங்களுக்குமேல் இப்பகுதியில் வசித்து வருகின்றோம். நாங்கள் குடியிருக்கும் குடியிருப்புகளுக்கு சொந்தமாக வீட்டுமனை பட்டா இல்லாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து வீட்டுமனைப் பட்டா வேண்டி பலமுறை விண்ணப்பம் அளித்தும் எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பட்டா இல்லாத குடியிருப்பு வீடுகளுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும் என அறிவித்ததையடுத்து, வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பித்தோம். தற்போது, தாங்கள் குடியிருக்கும் விட்டிற்கு (கிராம தத்தம் சர்வே எண்.6663 ல்) இலவசமாக பட்டா வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது வீட்டுமனைப் பட்டா கிடைத்தது எங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களைப் போன்ற பட்டா இல்லாத குடியிருப்புகளுக்கு லீட்டுமனைப் பட்டா வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு: சு.மோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். அ.அ.ரமேஷ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),