மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறை தருமபுர ஆதின கலை கல்லூரியில், கல்லூரியும், தனியார் மருத்துவமனையும் இணைந்து இலவச முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தருமை ஆதின மேலாளர் செல்வநாயகம் தலைமை வசித்தார். கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார் இலவச மருத்துவ முகாமில் ரூ 5000 மதிப்புள்ள ஈசிஜி , எக்கோ U S G (ஸ்கேன் ) ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது. மேலும், நோயாளிகளுக்கு இலவச மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாமில் தர்மையா தின கல்லூரி குழு உறுப்பினர் சிவராமன், மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்க நிர்வாகிகள் இளங்கோவன், துரை, பொகுட்டெழுனி, நவீன், கார்த்திகேயன், ராஜகோபால், மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 500 – க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



