செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்குழி பேரூராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வணக்கம் போலீஸ் மாத இதழ் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாமில் மதுராந்தகம் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் ஜெய ப்ரீத்தி மற்றும் மருத்துவர் ஹரிஹரசுதன் ஜமீன் எண்டத்தூர் வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குழுவின் மூலம் கருங்குழி சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இம் முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது இதில் ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது முகாமை வரவேற்று வணக்கம் போலீஸ் மாத இதழ் இணை ஆசிரியர் . வஜ்ரவேல் நன்றி கூறி சிறப்பாக முகாம் ஏற்பாடு செய்திருந்தனர் இதில் செய்தியாளர்கள் கபீர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார் மேலும் இம் முகாமில் மாண்புமிகு தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மதுராந்தக வட்டார அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்து 180 மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது இதில் முதல் கட்டமாக கருங்குழி பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வில் மருத்துவர் ஜெய ப்ரீத்தி மற்றும் மருத்துவர் ஹரிஹரசுதன் மற்றும் தெய்வநாயகி மற்றும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்ந்த பாலாஜி கோவிந்தராஜ் ஏர்னெஸ்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் பிரியா ஜமீன் எண்டத்தூர் கவிதா மக்கள் நலப் பணியாளர் திலகவதி ஜெய வாணிஶ்ரீ ஜெயலட்சுமி மற்றும் ஆண்டனி மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கத்தின் சேர்ந்த லாவண்யா ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர்