வேலூர்=09
வேலூர் மாவட்டம் சேர்க்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணிதிட்டம், சென்னை அகல்வால் கண் மருத்துவமனை, காட்பாடி ரெட்கிராஸ், எஸ்.வி.வி. ஜெயின் அறக்கட்டளை இணைந்து இன்று சேர்க்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிராமபுற மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். எஸ்.வி.வி.ஜெயின் அறக்கடளையின் அறங்காவலர் ச.ரமேஷ்குமார்ஜெயின் முதல்வர் பொறுப்பு முனைவர் அ.மு.சரவணன் நாட்டு நலப்பணி திட்ட கல்லூரி ஒருங்கிணைப்பாளர் பா.உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளை அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், கண்சிகிச்சை முகாமினை தொடக்கி வைத்தார். கண் மருத்துவ அலுவலர் கே.பிரகதி தலைமையில் கண் பரிசோதகர்கள் சுகேந்திரன், சாம்பவி, சதீஸ்குமார், காத்தி உள்ளிட்ட குழுவினர் கண் பரிசோதனைகள் செய்தனர்,