வேலூர்_27
வேலூர் மாவட்டம் வேலூர் சி.எம்.சி. கண் மருத்துவமனை ,கிரேஸ் கல்வி அறக்கட்டளை ,மற்றும் ஜெ.எஸ்.ஜெபவீடு இணைந்து நடத்திய 17 வதுஇலவச கண் சிகிச்சை முகாம் ஜெ.எஸ்.ஜெபவீடு பலவசாத்து குப்பத்தில் கிரேஸ் சமூக அறக்கட்டளை தலைவர் பி .மேத்யு தலைமையிலும் ,55 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வெற்றி சரவணன் ,54வது மாமன்ற உறுப்பினர் சுதாகர் பெருமாள், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் டேவிட் மனோகர், சி.எம்.சி. கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹிட்லர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. கிரேஸ் அறக்கட்டளை ஆலோசகர் இம்மானுவேல் பிரார்த்தனை செய்து கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்தார். உடன் செயலர் தாண்டவமூர்த்தி ,பொருளாளர் நத்தானியேல், மூப்பர் கலையரசன், மூப்பர் டேனியல் மற்றும் மருத்துவர்கள் ,செவிலியர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.