வேலூர்=02
வேலூர் மாவட்டம் வேலூர் சுதந்திர மாநகர அரிமா சங்கம் சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் அண்பூண்டி கிரியேட்டிவ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் அண்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் வி. உஷாரஜினி ஊராட்சி மன்ற துணைத் தலைவர், புனிதா தினகரன் ஒன்றிய கவுன்சிலர் ஏ. ஆர். ரகு, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. உடன் வேலூர் சுதந்திர மாநகர லயன்ஸ் சங்கம் தலைவர் லயன் பி.ஆர். சந்திரசேகர், செயலாளர் லயன் டி. ஜெயவேலு, பொருளாளர் லயன் சி. சுப்பிரமணியம், மண்டல தலைவர் 324 H லயன்ஸ் சங்கம் லயன் டி. சுந்தரமூர்த்தி மற்றும் லயன்ஸ் உறுப்பினர்கள் ரூபஸ், ரமேஷ் குமார் ஜெயின், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் ரோஜா, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.