வேலூர்_21
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா ரோட்டரி சங்கம் ,செதுவாலை ஸ்ரீரங்கா மருத்துவமனை மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் செதுவாலை ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் நடைபெற்றது .இதில் கண் பரிசோதனை செய்யப்பட்டு அதற்குரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். இதில் தலைவர் எஸ். சந்திரன் ,செயலாளர் என். கவியரசன் ,ரங்கா கண் மருத்துவமனை டாக்டர் விஷால் ,ரோட்டரி முன்னாள் தலைவர்கள் வி .பி .அண்ணாதுரை, சி வில்வநாதன், எஸ். சக்கரவர்த்தி, டி. கோவேந்தன், மருத்துவ இயக்குனர் சி. ஜெய்சிம்மன் ,முன்னாள் சங்கப் பணி இயக்குனர் ஜி. சுந்தர் ,எம் .ஜெயக்குமார், மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



