ராமநாதபுரம், பிப்.18-
ராமநாதபுரத்தில் ஸ்ரீ வேதா அறக்கட்டளை நான்காம் ஆண்டை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கண்ணில் குறைபாடுகள் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்து ஊறியவர்களுக்கு உரிய கண் அறுவை சிகிச்சை செய்ய இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் நான்காம் ஆண்டு விழாவில் ஸ்ரீ வேத அறக்கட்டளை அறங்காவலர் வீர மூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். அறக்கட்டளை செயலாளர் முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மலை ராஜன், ஆலோசகர் மணிமாறன், நிர்வாக குழு உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் இலவச கண் சிகிச்சை முகாம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர். முகாமில் 215 பேர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 47 நபர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.