திருப்பத்தூர்:மார்ச்:23, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசவுந்தரவல்லி தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மருத்துவர் உமா மகேஷ்வரி, அனைத்து நகர மன்ற, ஒன்றிய குழு, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இருந்தனர்.



