கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு யூனியன் கழுகுமலை வெங்கடேஸ்வர புரம் கிராமத்தில் உள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சில் நிதி இருந்து 8லட் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணியினை மாவட்ட கவுன்சில் பிரியா குரு ராஜ் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து வெங்கடேஸ்வர புரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு 2லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஸ்மார்ட்போன் டிஜிட்டல் போர்டினை வழங்கினார், இந்நிகழ்வில் வெங்கடேஸ்வர புரம் பஞ்சாயத்து தலைவர் ஆர்.தினேஷ்குமார் தலைமை வகித்தார் துணை தலைவர் முத்து லட்சுமி செளந்தரராஜன் முன்னணி வகித்தார், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் வரவேற்பு நிகழ்த்தினார்,ராஜா புதுக்குடி பால்ராஜ் கயத்தாறு லோகேஸ்வரன், மகேந்திரன் ஊர் முக்கிய பிரமுகர்கள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் சரமாரியப்பன் மற்றும் திமுக கிளை கழக செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்



