தென்காசி ஏப் 12
கடையநல்லூர் நகரத்தில் 31 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.
கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூரை அமைப்பதற்கும் மேல கடையநல்லூர் கிருஷ்ணன் கோவில் அருகே 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் அமைக்கவும் கடையநல்லூர் பள்ளிவாசல் எதிரே உள்ள நகராட்சி பூங்காவை பராமரிக்கும் பொருட்டு 6 லட்ச ரூபாயும் என மொத்தம் 31 லட்சத்திற்கு திட்டப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் எம் எல் ஏ கிருஷ்ண முரளி அடிக்கல் நாட்டினார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் சிவா ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் இந்த நிகழ்ச்சியின் கடையநல்லூர் திமுக நகரச் செயலாளர் எம் கே முருகன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சவுதி அரேபியா அம்மா பேரவை செயலாளர் மற்றும் மாவட்ட வர்த்தக அணி தலைவர் எஸ் எம் ஐ ஜி இடைகால் செல்லப்பா மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் தளவாய் சுந்தரம் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் ஜெயமாலன் கருப்பையா தாஸ் செங்கலமுடையார் கடையநல்லூர் நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்திர பிரசாத் கிளைக் கழகச் செயலாளர்கள் இசக்கி புதுமைகளின் பாபு அந்தோணி மாரியப்பன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
கடையநல்லூர் தாலுகா அலுவலகம் அருகே மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சத்து ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிழல் கூரை அமைப்பதற்கும் மேல கடையநல்லூர் கிருஷ்ணன் கோவில் அருகே ரூபாய் 15 லட்சத்திற்கு பன்நோக்கு கட்டிடம் அடிக்கல் நாட்டுதல் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நகராட்சி பூங்கா பராமரிப்பு பணிக்கு 6 லட்சம் என மொத்தம் 31 லட்சத்திற்கு அடிக்கல் நாட்டு விழா கடையநல்லூர்சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா B. Com அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் சிவ ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் அதிமுக நகர செயலாளர் எம் கே முருகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கிட்டு ராஜா, சவுதி அரேபியா அம்மாபேரவை செயலாளர் மாவட்ட வர்த்தக அணி தலைவர்.எஸ் .எம் மைதின்,இடைகால் செல்லப்பா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் மு. தளவாய் சுந்தரம் , மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் ஜெயமாலன், கருப்பையா தாஸ், செங்கலமுடையார், கடையநல்லூர் நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்திர பிரசாத், வார்டு கழகச் செயலாளர்கள் இசக்கி,உதுமான் மைதீன், பாபு, அந்தோணி, மாரியப்பன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.