தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறில் அமைந்துள்ள மாவட்ட கவுன்சிலர் அலுவலகத்தில், கலைஞரின் முரட்டு பக்தன் முன்னாள் தூத்துக்குடி சட்டமன்றத் உறுப்பினர் என்.பெரியசாமி அவரின் எட்டாம் அண்டு நினைவு முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவருடைய திருவுருவ படத்திற்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தலைமையில் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் பெரியசாமிபுரம் திமுக கிளைக் கழகச் செயலாளர் பூலையாபாண்டியன், கரிசல் குளம் திமுக கிளைச் செயலாளர் சுப்புராஜ், தெற்குஇலந்த குளம் நாட்டாமை ஆறுமுகம், திருமங்கலம் குறிச்சி திமுக பரமசிவம், சாலைப்புதூர் சரவணன், ராஜாபுது குடியைச் சேர்ந்த பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..



