மதுரையில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் மந்தை திடலில் திமுக கொடி ஏற்றி கருணாநிதி படத்திற்கு மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பேருந்து நிலையம் பகுதியில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
விழாவில் திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டி மண்டல தலைவர் சுவீதா விமல், மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி , 92வது வட்ட செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்