கன்னியாகுமரி ஜூன் 28
முன்னாள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் குமாரதாஸ்-ன் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி.
ஜாதி, மதம், இனம்,மொழி என அனைத்திற்கும் அப்பாற்பட்டு எல்லோரிடமும் சகஜமாக பழகுபவரும், மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர்
குமாரதாஸ் மரணம் அடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவரின் நெருங்கிய நண்பரான குளச்சல் ஜேம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஜேம்ஸ் பிரேம்குமார் மற்றும் கருங்கல் காட்வின் ஆகியோர் தலைமையில் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலியானது காட்டாக்கடை லுதரன் மிஷன் சபை போதகர் நவ தீபன்,முன்னாள் போதகர் சகாய தாஸ் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனையுடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குமாரதாஸ் கல்லறைக்குச் சென்ற மருத்துவர் ஜேம்ஸ் மற்றும் குமாரதாஸ் குடும்பத்தார், நண்பர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவருடைய கல்லறையில் மாலை அணிவித்து, மௌனமாக நின்று ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர் ஜேம்ஸ் தனது நண்பரான குமாரதாஸ் குறித்து தெரிவிக்கையில் :-
முன்னாள் எம்எல்ஏவும் தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான குமாரதாஸ் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது சொந்த ஊரான கருங்கலுக்கு காரில் திண்டிவனம் அருகே வந்து கொண்டிருக்கும்போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு காரிலேயே உயிரிழந்தார். நெஞ்சு வலி காரணமாக குமாரதாஸ் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் குமாரதாஸ்.கடந்த 1984, 1991, 1996, 2001 உள்ளிட்ட ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவாக நான்கு முறை இருந்தவர். தமிழ் மாநில காங்கிரஸ் துணை தலைவராக குமாரதாஸ் பதவி வகித்து வந்தார். இவர் ஜனதாதளம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பின்னர் மீண்டும் காங்கிரஸ் கடைசியாக மீண்டும் வாசன் துவக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.
இடையில் கடந்த டிசம்பர் 2002ம் ஆண்டில், தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு புதிய கட்சியையும் குமாரதாஸ் உருவாக்கினார்.இவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட போது இரு முறை ஜனதா தளம் சாா்பிலும், இரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார் .1984-ம் ஆண்டு மற்றும்1991 ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் வேட்பாளராகவும், 1996 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற பெயரில் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று நம் மத்தியில் அவர் இல்லை, ஆனால் அவரின் நினைவலைகள் எப்பொழுதும் எங்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்தவை அது எப்பொழுதும் மாறாது என அவர் தெரிவித்தார்.
நேற்று அவர் மரணம் அடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அவருடைய குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் அவருடைய கல்லறைக்கு சென்று மாலை அணிவித்து பிரார்த்தனையில் ஈடுபட்டு ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.