மதுரை அக்டோபர் 16,
மதுரை மாவட்டம் கருவனூர் ஊராட்சியில் சின்னப்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல்முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவரால் பாராட்டுக்களை பெற்ற நவீன மருத்துவத்திற்கு புகழ்பெற்ற மதுரையின் அடையாளமான மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வீர விளையாட்டு குழு வீரர்கள் களம் இறங்கினார்கள். இப்போட்டியில் 19 காளைகளும் 19 குழுக்களாக மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர் மேலும் குலமங்கலம் ஜல்லிக்கட்டு பேரவை கே எம் வக்கீல் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மேலும் வெற்றி பெறும் மாட்டிற்கும் மாடுபிடி வீரர்களுக்கும் 7001 ரூபாய் விழா குழுவின் சார்பாக பரிசாக வழங்கப்பட்டது. மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.