கடையநல்லூர் டிச 6
கடையநல்லூர் காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பொதுவெளிகளின் மது அருந்தி அப்பகுதிகளை சீர்குலைத்து வரும் குடிமகன்களின் சிம்ம சொப்பனமாய் கடையநல்லூர் காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் பொதுநல அமைப்புகளும் பொதுமக்களும் கடையநல்லூர் காவல்துறையை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
ஒரு காலகட்டத்தில் கடையநல்லூர் காவல் சரக்கு எல்லைக்குட்பட்ட பகுதியாக சொக்கம்பட்டி புன்னையாபுரம் சிங்கிலிபட்டி திரிகூடபுரம் கருப்பாநதி வரட்டாற்று குப்பத்து ஓடை கங்கன் குளம் உள்ளிட்ட பகுதிகள் வரம்பிற்குள் இருந்தன அப்போதைய காலகட்டத்தில் போதிய காவலர்கள் இல்லாத நிலையிலும் அப்பகுதிகளில் எங்கு திரும்பினாலும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது சிறுகுரு தொழில் போல் விளங்கி வந்தன இந்த நிலையில் அப்போது நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தொடர்ந்து பல வட மாநில அதிகாரிகள் பணியாற்றி வந்த நிலையில் நேர்மையான உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளர்களை கொண்டும் காவலர்களை கொண்டும் இந்த சமூகத்தை சீரழிக்கின்ற கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என கங்கணம் கட்டி உறுதியேற்று அப்பகுதிகள் முழுவதும் காய்ச்சப்பட்டு வந்த கள்ளச்சாராயத் தொழிலை முற்றிலுமாக ஒழித்ததோடு மட்டுமின்றி சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் உள்ளபடியே அரசுக்கு முறையாக பரிந்துரை செய்து காந்தி விருதுகள் வரை மாவட்ட காவல் நிர்வாகமும் மாவட்ட
ஆட்ச்சி நிர்வாகமும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது அதன் பின்னர் கடையநல்லூர் காவல் சரகம் பிரிக்கப்பட்டு சொக்கம்பட்டி தனி காவல் சரகமாக விளங்கி தற்போது மருந்துக்கு கூட கள்ளச்சாராயம் அப்பகுதியில் இல்லை என்பதை அப்பகுதி பொதுமக்களும் பொதுநல அமைப்புகளும் அரசும் அதை உறுதி செய்தன மாறாக கடையநல்லூர் சரகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் குமந்தாபுரம் மாவடிக்கால் மேலக்கடைய நல்லூர் அச்சம்பட்டி புதுக்குடி கம்பனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு விற்பனை செய்கின்ற மதுப் புட்டிகளை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர் அப்படி விற்பனை செய்கின்ற படுகின்ற மது புட்டிகளை வாங்குபவர்கள் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கின்ற பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை கட்டிடத்திற்குள்ளும் விவசாயத்திற்காக தண்ணீர் தேக்கப்படும் குளங்களிலும் அதிலிருந்து மறுகால் தண்ணீர் வழிந்தோடும் கால்வாய்களிலும் ஓடைகளிலும் மதுவை அருந்தி விட்டு அப்பகுதியை அருவருக்கத்தக்க செய்யும் வகையிலும் பாட்டில்களை உடைத்தும் சின்னாபின்னமாக்கி தினமும் குடிமகன்கள் அலப்பறைகள் செய்து வந்தனர் இது குறித்து இருக்கின்ற காவலர்களை வைத்து இந்த அதிக மக்கள் தொகை உயர்ந்த நிலையிலும் தங்களால் இயன்ற தடுப்பு நடவடிக்கைகளை கடையநல்லூர் காவல்துறை மேற்கொண்டாலும் ஏனோ குடிமகன்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை வரம்பின்றி கொடிகட்டி பறந்து வந்தது. எங்கு பார்த்தாலும் பெண்கள் நிற்பதை கூட பார்க்காமல் அங்கே மது அருந்துவது அந்த பயணிகள் நிழற்கூரை கட்டிடத்திற்கு உள்ளே சிறுநீர் கழிப்பது மலஜலம் கழிப்பது என பல்வேறு அருவருக்கத்தக்க காரியங்களையும் செய்து வந்த நிலையில் கடை நல்லூர் காவல்துறை ஆய்வாளராக ஆடிவேல் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அதிகாரியின் கவனத்திற்கு பொதுநல அமைப்பினர் இது போன்ற ஈனச் செயல்களை தடுத்து நிறுத்த கேட்டுக்கொண்டு புகார்கள் அனுப்பிய வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் புதிய ஆய்வாளர் ஆடிவேல் தனது கீழ் பணியாற்றும் காவலர்களைக் கொண்டே முதற்கட்டமாக பொது வழிகளில் மதுவருந்தி அலப்பறை செய்பவர்களை எச்சரித்தும் அதன் பின் கடுமையான நடவடிக்கைகளில் மேற்கொள்ள களப்பணியில் இறங்கினார். ஆனால் சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முனைப்பு காட்டி ஆய்வுக்கு செல்கின்றது செல்லும்போது போதை ஆசாமிகளுக்கு முன்கூட்டியே காவல்துறையில் உள்ள சில கறுப்பாடுகள் மூலம் தகவல் கிடைக்க பெற அவர்கள் அங்கிருந்து சற்று முன்பு கிளம்பி விடுகின்றனர் இதனால் பொதுமக்கள் கொடுத்த புகார்களில் நடவடிக்கை எடுக்க காவல்துறை கொஞ்சம் சுணக்கம் காட்டியது இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஆடிவேல் புதிய வழியில் அதாவது காவல்துறை வாகனங்களை ரோந்துக்கு பயன்படுத்தாமல் வாடகை கார்களை வாடகைக்கு எடுத்து அதில் சீருடை அணியாத காவலர்களைக் கொண்டு ரோந்து வந்து இது போன்ற பொதுவெளிகளில் அலப்பறைகளில் ஈடுபடும் மதுவருந்தபவர்களை பிடித்து பல்வேறு வகைகளில் அவர்கள் மீது வழக்குகளை புனைந்தும் அவர்களது இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும் உள்ளார் …இதனால் நகரின் பல்வேறு பொது இடங்கள் தற்போது இது போன்ற காரியங்களுக்கு பயன்படாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கவே கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் காவலர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உள்ளபடியே மெத்த மனதோடு பாராட்டி வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் மீண்டும் காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளனர்.