கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூரில் உள்ள 72 வணி கடைகளுக்கு முறையாக ஒப்பந்தப்பள்ளி மேற்கொள்ளாமல், முறைகேடாக வாடகைக்கு விடப்பட்டும், லட்சக்கணக்கில் முன்பணத்தை தனி நபர்கள் சிலர் மட்டும் பெற்றுக்கொண்டு, வாடகை பணத்தையும் முழுமையாக அரசுக்கு சேர்த்தாமல் வீண்டிப்பதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இராஜசேகரன் தலைமையில் கீழ், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு பாமக கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். ஆர்பாட்டத்தின் போது முறையாக ஏலம் விடப்பட்டு வணிக வளாக கடைகளை வாடகைக்கு விட வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர். மத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அண்ணாமலை, ஒன்றிய செயலாளர் குமார், சந்திரன், ரங்கசாமி, வன்னியர் சங்க செயலாளர் இராஜா, மாநில நிர்வாக குழு தலைவர் மேகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடாஜலப்பதி, டி.வி.கணேசன், கே.வி.முருகன், மற்றும் மூர்த்தி, ஆறுமுகம், மணி, குபேந்திரன், கஜேந்திரன், தமிழ்சங்கர், மாயகண்ணன், அருள், கோவிந்தசாமி, வேடியப்பன், சிவா, பாவேந்தன், ராஜா, வடிவேலு, முனியப்பன், கலைவாணி, சாந்தாகௌரன், மோகன், ஓமாதவன், சரவணன், பாஸ்கர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், நடராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேசன், செல்வகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் செங்காகவுண்டர், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜசேகரன், தமிழசங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இவ்வார்பட்டத்தில் கலந்து கொண்டனர்.