நாகர்கோவில், மே 15:
தமிழகத்தில் பணியாற்றும் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரிகள் 28 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியாக இருந்த டாக்டர் செந்தில்குமார் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெயராம பாண்டியன், குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.