காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு உயர்நிலை பள்ளிக்கு புரட்சித்தலைவர் சமையல் கூடம் வரப்பெற்றதை தொடர்ந்து பூமி பூஜை போடப்பட்டது.
7, லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சமையல் கூடத்திற்கான பூஜையில் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் போடப்பட்டது. இதில் ஸ்ரீபெரும்புதூர் செயற்பொறியாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மற்றும் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்,
ஊராட்சி செயலாளர்,மக்கள் நலப் பணியாளர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் கூட்டு வங்கி தலைவரும், வெங்காடு ஏரி நீர் பாசன சங்க தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான வெங்காடு உலகநாதன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டார்.
வெங்காடு உயர்நிலை பள்ளிக்கு புரட்சித்தலைவர் சமையல் கூடம் வரப்பெற்றதை தொடர்ந்து பூமி பூஜை போடப்பட்டது.



