தருமபுரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பாட்டாளி தொழிற் சங்கம் சார்பில் கல்வெட்டு, கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ். பி. வெங்கடேஸ்வரன் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தொழிற்சங்க கொடி ஏற்றியும், கல்வெட்டைதிறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் இராம. முத்துக்குமார் பேரவை பொதுச் செயலாளர், வி. பாடி செல்வம் கௌரவ தலைவர் பாட்டாளி தொழிற்சங்கம், இரா. வீரமணி பேரவை தலைவர், தா.சேகர் பேரவை பொருளாளர்,மு. செல்வகுமார் மாவட்ட தலைவர் மேற்கு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பாட்டாளி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.



